கண்ணாடிக் கோப்பை

சுத்தமாக க் கழுவிக் கவிழ்த்து வைத்தால் கண்ணாடித் தம்ளரை போல தெளிவும் அழகும் வேறு எந்த தம்ளரிலும் இருக்காது.
அதேபோல்தான் கண்ணாடிப் பாத்திரங்களும்.
அடிக்கடி குட்டி சைஸ், சின்ன சைஸ் முதல்கொண்டு பெரிய சைஸ் வரை கண்ணாடித் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள் நான் வாங்கி வைத்துக்கொள்வேன்.
ஒரு மூட் வரும்பொழுது கொஞ்சமாக டீ அருந்த, உள்ளதில் சின்ன சைஸ் தம்ளரில் ஊற்றிக் குடிப்பேன்......

ஸ்டீல் தம்ளருக்கும் கண்ணாடி தம்ளருக்குமிடையே சுவையே சற்று வேறாக இருக்கும்.
கூடவே கண்ணாடிக் கோப்பையை எடுக்கும் பொழுதும் வைக்கும் பொழுதும் உண்டாகும் கிண்கிணிசத்தம் ஒரு தனி இனிமை.

பல டீக்கடைகளில் இன்னும் கண்ணாடி தம்ளர்களில் தேநீர் கொடுக்கிறார்கள்.

அந்தக் காலத்தின் சிங்கிள் டீ பற்றி அடிக்கடி புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
சிறுவயதில் கஷ்டப்படும்போது சிங்கிள் டீயும் பன்னும் அருந்தி வயிற்றைக் கழுவினோம் என்று பலர் தங்கள் பால்ய அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

அந்தச் சிங்கிள் டீ என்பது அரை டீ என்று என் திருமணத்திற்கு பிறகுதான் எனக்குத் தெரிந்தது, என் கணவர் கூறினார் அதைப்பற்றி........அதாவது பாதி டீ!
அவர் கல்லூரியில் படித்த காலத்தில் பரீட்சைக்கு முன்பு ராத்திரியில் படிப்பது டீக்கடையில் தான் ... சிங்கிள் டீ அருந்தியவாறே!

ஆனால் கடந்த10 வருடங்களாக நான் கண்ணாடி உபயோகிப்பது மிகவும் குறைந்துவிட்டது, ஏனென்றால் நான் அம்மாவுடன் இருக்கிறேன் இப்பொழுது.....அவர்களுக்கு கண்ணாடி ஆகாது, உடைந்துவிடும் என்ற காரணத்தால், பீங்கானும் ஆகாது அதே காரணத்தால்!

மெலமைன் என்ற கூறப்படும் பொருளால் ஆன கோப்பைகள் வாங்கி வைப்பார்கள்.
எனக்கு மெலமைன் ஆகாது!


👇

கண்ணாடிக்கோப்பை

மாத்தேறல் இன்தேறல் மதுவென்னும் பல தேறல்,
கண்ணுக்கொரு விருந்தேறல்
காண்பிக்கும் கண்ணாடிக் கோப்பை!

தாகத் தேறல் தண்ணீரும்
அமிர்தமான நீர்மோரும்,
குளிர்பழச்சாறும்  எலுமிச்சை நீரும்
கண்ணாடிக் கோப்பையிலே
கண்ணுக்கோர் அழகன்றோ ?

கொதிக்கும் குழம்பி,
சுடச்சுட தேநீர்,
அந்தக்காலத் அரைத்தேநீர்,
குழந்தைக்கான பசும்பால்,
விருந்தின் முடிவில் பாயாசம், விடிந்ததும் அருந்தும் கடுங்காப்பி.....

பாலென்றும் சாறென்றும் தேறலென்றும் சாரலென்றும்
அருந்துமோர் நீர் எதுவென்றாலும்,
நாவுக்கோர் ருசியென நன்றாய் உணர்வது,
கண்ணுக்கோரழகுக் கண்ணாடி கோப்பையிலே !


தேறல்:

மனமதுவில் மனமெடுத்து
வைத்துவிட்டு,
மனமது மிதக்கும் நீரோடை!








Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி