சுயம்பு வேம்பு

மனிதரில் பலவகை இருப்பதுபோல் மரங்களிலும் உண்டு எனத் தோன்றும் சில நேரங்களில்.
பனைமரம் தென்னைமரம் வாழைமரம்... என்ற
பி.சுசிலாவின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது..... ஆனால் அந்தப் பாடலும் மனிதன் தேவையை சுற்றியே மூன்று மரங்களைக் கம்பேர் செய்து பாடுவதால்  அப்பாடல் ஒரு குறுகிய மனப்பான்மையை கான்பிப்பதாகத் தோன்றுகிறது.

வேப்பமரம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு 'சுயநலமில்லாத' மரம்....
எந்த உதவியும் கேட்காது அதுபாட்டுக்கு வளரும்.

நல்ல குளிர்ச்சியான நிழல் கொடுக்கும்.... சீசனில் அந்த வேப்பம்பூ தரையில் உதிர்ந்து கிடந்தால் கம்மென்று ஒரு அருமையான மணம் வீசும்...

வெயில் காலங்களில் வேப்ப மர நிழல் போல் சொர்க்கம் எதுவும் கிடையாது.

சிறுவயதில் வேப்பம் பழங்களைப் பொறுக்கி தின்றது லேசாக ஞாபகம் வருகிறது.... நல்ல கசப்புடன் சிறிதே இனிப்பு கலந்திருக்கும்.

என் பசங்களுக்கு அவர்கள் விளையாடிக் கீழே விழுந்து அடிபட்டால் வேப்பங்கொழுந்தை மஞ்சள் தூளுடன் கலந்து அரைத்து பூசி இருக்கிறேன்.
விரைவில் புண் ஆறிவிடும்.

வேப்பம்பூ பச்சடியும் வடகமும் செய்ய தெரியாது, இனிமேல் பழகி செய்யலாம் என்று இருக்கிறேன்.

இறுதியில் நானும் என் தேவையை வைத்தே வேப்பமரத்தை பிடித்திருக்கிறேன்.... நானும் மனிதரில் ஒரு வகை தானே!
😊

👇

சுயம்பு வேம்பு

குழியும் வேண்டாம்
உரமும் வேண்டாம்
யாரும் என்னை நடவும் வேண்டாம்
பறவை போடும் எச்சம் போதும்
நானாய் வளர்ந்திடுவேன்!

எங்கும் வளர்வேன்
எதிலும் வளர்வேன்
எதிர்பார்ப்பென்று
எதுவுமில்லை...
வேலியின் ஒரம்
காட்டின் நடுவில்
வீட்டின் முன்னே
வீட்டின் பின்னே
விட்டால் போதும்
வளர்ந்து விடுவேன்!

தண்ணீர் இருந்தால் வளர்வேன்,
இல்லாவிட்டால்  இருப்பேன்,
வெயில் என்றால் இறவேன்..
குளிர்ச்சி என்றால் என்  நிழலே,
காற்றின் தூய்மை என்னாலே,

மணக்கும் வேப்பம் பூவும்
பச்சடி ஆக மாறக்கூடும்,
கொழுந்தை அரைத்துப் பூசினாலே
தோலின் புண்ணும் ஆறிடுமே,
வேப்பங்கொட்டை எண்ணெயும் மருந்தெனவே ஆகக்கூடும்!

பூமியை காக்கும் எந்தன் வேர்கள் வீட்டுக்கா பத்தன்று என்னை வெட்டும் நல்லவரே,
நீங்கள் கட்டும் வீடுகளே
பூமிக்காபத்து என்பதையே
நீங்கள் இன்னும் உணரவில்லை!

சின்னக் கூரிய இலையுடனே
அடர்ந்த மரமாய் நான் வளர
சிறிது  காலம் பிடிக்குமே...
முழுமையான மரமென்று
வளர்ந்து நானும் நின்றாலே,
என்னை விடவும் அழகு இந்த உலகில் அதிகம் ஏதுமில்லை -
இயம்புகிறார்.....இன்று
புதிதாய்  பாடும் மருத்துவரே!

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி