Gray's anatomy


Gray's anatomy

மருத்துவப் படிப்பின் முதல் வருடம்
உடல் கூறமைப்பை மனப்பாடம்
செய்வதை நினைத்தால் குலை நடுங்கும்.

உடல்கூறு அமைப்பின் விளக்கங்கள்
நாளம் நரம்பின் வழித்தடங்கள்
அனைத்தும் விளக்கும் ஹென்றி கிரே.

இறந்த மனிதன்உடலை எடுத்து,
இரவும் பகலும் அதனை அறுத்து,
மூளை இருதயம் வயிற்றுப் பாகம்
கையும் காலும் எலும்பும் சதையும்,
அனைத்தும் படித்து அழகாய்ப் பிரித்து,
நண்பர் வரைந்த ஓவியம் மூலம்
தெள்ளத் தெளிவாய் விளக்கம் கூறும்
அருமை நூலைக் கொடுத்த பெருமான்..
ஹென்றி க்ரேவெனும் இளைய பெருமான் .

சின்னஞ் சிறிய தசைநாறும்
அதனினும் சிறிய எலும்பின் கூறும்
கொஞ்சம் கூட விட்டுவிடாமல்
ஹென்றி கிரேவின் புத்தகம் பேசும்
அழகாய் விரிவாய் நம்மோடு!

இன்றும் மருத்துவர் படிக்கும்
அடிப்படை அறிவை வழங்கும்
உடற்கூறு அமைப்பைக் கொடுத்த
ஹென்றி கிரேவின் வாழ்வோ அகவை முப்பத்தி நான்கே!


👇🏼

கோவை மருத்துவக் கல்லூரியில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த பொழுது, தினமும் காலை ஏழரை மணிக்கு 'அனாடமி லேப்' செல்லவேண்டும்.

உடற்கூறு அமைப்பை படிப்பதற்கு
இரண்டு மணி நேரம்.
இறந்த மனித உடலை அறுத்து ஒவ்வொரு பாகமாக படிப்போம். அருகிலேயே எப்படி அதை செய்வது என்று எங்களுக்கு விளக்கும் புத்தகமும் உண்டு.

பல மனித உடல்களைப் பதப்படுத்தி வைத்திருக்கும் அந்த அறையின் வாசம் பொறுத்துக்கொள்ள ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது.
நாளடைவில் பழகிவிட்டது.
சிறிது நாட்களில் அந்த வாசம் இருப்பதே எங்களுக்கு தெரியாத அளவிற்கு அது பழகிவிட்டது. நன்றாகப் பேசி சிரித்துக் கொண்டு இருப்போம் அந்த அறையிலேயே.

உடற்கூறு அமைப்பின் தந்தை எனலாம், உலகம் பூராவும் உடற்கூறு அமைப்பைப் படிப்பவர்கள் உபயோகிக்கும் புத்தகத்தை எழுதிய திரு. ஹென்றி கிரே (பிறப்பு1827) என்பவரை.
அவரைப் பற்றி இன்று நினைத்தாலும் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது எனக்கு!
அந்த அளவிற்கு 'மனித உடற்கூறு அமைப்பு' என்னும் பெருங்கடலை அவ்வளவு கோர்வையாக ஒரு புத்தகத்தில் வடித்திருக்கிறார் அவர்.




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி