அஞ்சலி!


காட்டின் மேலே பறக்கும் ரயில்


நகரத்து நெரிசலுக்கு மேம்பாலம்
உடனே சட்டம், அதற்கொரு திட்டம்
ஏலத்தைப் போட்டு ஒப்பந்தமிட்டு
லாபத்தை ஈட்டு.

கற்களை அடுக்கு தூண்களை ஏற்று
விரைவில் வரவேண்டும் மேம்பாலம்
மனிதர் செல்வார் அங்கும் இங்கும்
செய்ய வேண்டும் அதையும் இதையும்

நகரத்தில் எதற்கு மேம்பாலம்?
'வாகன நெரிசல் அதிகமப்பா
விபத்தேற்பட்டால் தொல்லையப்பா
மனிதன் கையும் காலும் உடையும்
சிலநேரம் மாண்டு போகவும் கூடும்'

அதையும் மீறி விபத்தேற்பட்டால்
இருக்கவே இருக்கு நூத்தி எட்டு🤗

காட்டுகேனில்லை இப்படி ஒரு சட்டம்?
🌳🙊🐢🐆🐅🌳🐏🐘🦏🐒🐦🦉🌳
எங்கள் காட்டில் நீங்கள் செல்ல
பறக்கும் இரயில் ஏன் இல்லை ?

🐘
என்னுயிர் எனக்கு வேண்டாமா?
எனக்குக் குழந்தை இல்லையா ?
ரயிலடித்து நான் போனால்
யார் பார்ப்பார் என் குழந்தை?

அதை நீங்கள் சிறை எடுத்து
கோவில் ஒன்றில் கட்டி வைத்து
ஆயுளுக்கும் அடிமையாக
என் குழந்தை வாடி இறக்கும்

மனிதரிலே விபத்துக்கள் வேண்டாம், கொத்தடிமை வேண்டாம்!
நாங்களென்ன பாவம் செய்தோம்?
அடிமை வாழ்வு வாழவும்
விபத்தில் சிக்கி மடியவும்
மனிதர்களே கூறுங்கள்..
ஓரறிவு அதிகமுள்ள மனிதர்களே கூறுங்கள்
நாங்களென்ன பாவம் செய்தோம்? 🐘


An elephant was hit with great force by a train yesterday (in West Bengal think) and I hear it is now being treated. Whether it survives or succumbs, I pray it happens soon. This verse is dedicated to the great gentle animal .😓.👇
The poor gentle giant died last evening .

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி