பொய்


பொய்


ஐம்பது வயதில் இது குறையும்
அறுபது வயதில் அது குறையும்
எலும்புகள் அனைத்தும்
உடைந்துவிடும்
இந்த மாத்திரை உண்ணுங்கள்
அந்த மாத்திரை உண்ணுங்கள்
இரத்த சக்தி ஏற்றுங்கள்

ஐம்பது வயதில் இது ஏறும்
அறுபது வயதில் அது ஏறும்
அடிக்கும் இருதயம் நின்றுவிடும்
இந்த மாத்திரை உண்ணுங்கள்
அந்த மாத்திரை உண்ணுங்கள்
ரத்தக் கொழுப்பைக் குறையுங்கள்

இயல்பாய் இருக்கக்கூடாது
இருந்தால் இறந்து போவீர்கள்
சிறுவர் சிறுமிக்கொரு மருந்து
அன்னை தந்தைக்கொரு மருந்து
தாத்தா பாட்டிக்கொருமருந்து
எல்லாம் இருக்கு மருந்துலகில்.

"மருந்துகள் இல்லா ஒரு நிலையை
நினைத்துக்கூட பார்க்காதீர்
நவீன உலக வாழ்க்கையிலே"
என்று கத்திக்கதறும்
நம்மைச் சுற்றும் ஊடகமே!

எனக்கோர் ஐயம் உண்டிங்கே
இதற்கு முந்தய மனிதர்கள்
யாரும் பிழைக்கவில்லையோ
மாத்திரை இல்லாக் காரணத்தால்?!

எப்படி வந்தோம் நாம் மட்டும்
உயிரில்லாத உலகிருந்து?

நமக்கு வேண்டியது மாத்திரையல்ல
பொய்களை உணரும் ஞானம் ஐயா!


👇🏼

நானே ஒரு மருத்துவர் என்றாலும் அதிகமாக மருந்துகள் உபயோகிப்பது எனக்கு பிடிக்காது.

 எங்கள் மருத்துவ புத்தகங்களிலும் யாரும் அப்படி கூறியதில்லை .

முக்கால்வாசி வியாதிகளுக்கு சில நாட்கள் 'சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட்'  மட்டும் கொடுத்து பார்த்துவிட்டுத்தான் மருந்து ஆரம்பிக்க வேண்டும்.

 புத்தகங்கள் எல்லாம் சரியாகத்தான் கூறுகின்றன, நாம்தான் அதை சரியாக செய்வதில்லை என்பது என் கருத்து.

 நான் மருத்துவராக இருந்தபோதிலும் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் சில சமயங்களில் அதிகம் தேவையில்லாத மருந்து உட்கொள்ளவும் தேவையில்லாத அறுவை சிகிச்சை செய்யவும் சொல்லியிருக்கிறார்கள்....... எனக்கு அது சரியாக படவில்லை எனவே......கீழே உள்ள பாடல்👇







Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓