நேரென்ற பார்வை



நேர் என்ற பார்வை

கண்ணை மறைக்கும் வாரும்
வேகம் கொண்ட காலும்
குறிக்கோள் நோக்கும் இதயம் , இவை அனைத்தும் உந்தித்தள்ள குறியை நோக்கி ஓடும்
குதிரை நிச்சயம் ஜெயிக்கும் , குறிக்கோளை எட்டிப் பிடிக்கும்.

பிறக்கும் குதிரை குணமென்ன குறிக்கோளுண்டா அவ்வேளை ? காட்டுக்குதிரைக்கென்ன குறிக்கோள் ?
புல்லைத் தின்னும் நீரை குடிக்கும்
புலி வந்தால் பாய்ந்தோடும் ..
புலி போனால் நின்றாடும் !
புலியில்லா நேரம் வாழ்வாங்கு நேரமே,
பிறந்த காடு மலையும் பச்சைப்பசேல் புல்வெளியும் அலைந்து திரிந்து அனைத்தும் பார்த்து
முழுமை வாழ்வு வாழ்ந்திடுமே!

குறிக்கோளைத் தந்தது யார் ,
கண்ணில் வாரைப் போட்டது யார் ?
நாம்தானே ! நாம்தானே !
'அறிவெமக்கு அதிகம்'
கூறிக்கொள்ளும் நாம்தானே ?

இயற்கை வாழ்வை விட்டு
இழுத்துக் கொண்டு வந்து
குதிரைக்குட்டி உனையே
எம் குறி நோக்கி ஓடென்றோம் 😐

பின் பார்த்து முன் பார்த்து
இரு பக்கம் பார்த்து
உலகென்றால் என்ன
உணர்வென்றால் என்ன
அனைத்தும் பார்த்த வாழ்வு
அதுவே நல்ல வாழ்வு .
குறியை மட்டும் பார்க்கும் ஓட்டம்
வாழ்வேயல்ல ,சாவாகும்.

குதிரைக் கண்ணின் வாரு
நம் கண்ணின் மேலே பாரு,
நாமும் குறியை நோக்கி
ஓட்டம் என்று ஓடுகிறோம் ..

குழந்தைப் பருவம் முதலே பணமில்லாத எதுவும்
காணா வண்ணம் கட்டும் வாரு
கண்களிரண்டை மறைக்குது பாரு .

பணமென்னும் குறியை நோக்கி கண்ணிரண்டில் வாரைக் கட்டி
நேர் என்ற பார்வை கொண்டு
போட்டி போட்டு ஓடுகிறோம்
பின்னால் துரத்தும் புலியாக
பொரிவலையாகும் எலிப்பந்தயம் .

வாரைத் தூரப் போட்டு சுற்றும் முற்றும் மெதுவாய்ப் பார்த்து
ஓட்டம் நிறுத்தி நடை நடந்து வாழ்ந்து பார்த்தால்
என்ன குறை ?
குறி நோக்கும் வாழ்வில்
நிறைவென்ன சொல் மனமே


பணமே வாழ்வா?


பணம் நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப அத்தியாவசியமான ஒன்னா ஆயிருச்சு இந்த காலத்துல
கண்டிப்பா ஒரு அளவுக்காவது எல்லாருக்குமே பணம் தேவை.

ஆனால் அந்த ஒன்னு மட்டுமே குறி வெச்சு நாம எல்லாரும் ரொம்ப ஓடிட்டு இருக்கோமோ.....
அப்படின்னு ஒரு எண்ணம் வருது  அடிக்கடி..

அதுவும் இப்போ கொஞ்ச நாளா சின்ன வயசுல இருந்தே அந்த ஒரு குறிக்கோளை நம்ம மனசுல ஏற்றிவிட்டு இருக்கிற மாதிரி இருக்கு...

எனக்கு சரியாத்தெரியல, ஆனா ஒரு முழுமையான வாழ்க்கை வாழ விடாமல் இந்த குறுகிய நோக்கு வந்து தடுக்குதோன்னு நான் நினைக்கிறேன்.

இவ்வளவு பரந்த, ஒரு பலதரப்பட்ட ,மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை பூராவும் ...... நாம கண்ணைத் திறந்து பலவாக்கிலும்  பார்க்காமல், சௌகரியத்துக்கு மட்டுமே உண்டான இந்தப் பணம் என்பதை மட்டும் குறியாகக் கொண்டு போறோமோங்கற ஒரு ஆதங்கம் எனக்கு இருக்கு......மேலும் இந்தக் குறுகிய நோக்கு இயற்கைக்கு மாறா இருக்கிற மாதிரியும் தோணுது..

இந்த ஆதங்கத்தோடு விளைவுதான் மேலே உள்ள பாடல்.




 ?

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி