உண்ணும் உணவு


உண்ணும் உணவு

வட்டத்தட்டில் இட்டிலி
பக்கம் தேங்காய்ச் சட்டினி,
வருமே பொடியுடன் நல்லெண்ணெய்,
நெய் மிதக்கும் சாம்பாரும்
பார்வைக்கழகு வட்டத் தட்டில் இட்டிலி!

கண்ணுக்கழகு தட்டில் இட்லி, வாசம் வந்தது மூக்கில் இன்பம்,
இட்டிலி பிட்டு வாயில் போட்டால்
நாக்கில் சுவையுடன்
கரைந்து போகும்,
கவனத்துடன்  செய்த உணவு
பசித்த வயிற்றில் தேவாமிர்தம்!

குட்டிக் குழந்தைக்கென்ன உணவு?
கூழோ பாலோ புட்டியில் அடைத்து
அன்புடன் கொடுத்தாள்    அன்னை
அந்தக் குழந்தைக்கதுவே உணவு!

பார்த்து உண்ணும் சமைத்த உணவு
அழகாய் செரித்துக் உடலைச் சேரும்....
உணவைக் கட்டும் நெகிழிப்பை,
பாலை கொள்ளும் நெகிழி புட்டி
வீசி எறிந்தால் கடலைச் சேரும்.

கடலின் மீனாம் திமிங்கலம்,
வீட்டினும் பெரிய திமிங்கலம், தீங்கெதும் எண்ணா திமிங்கலம்,
வாயைத் திறந்து நீந்தினால், உள்ளே செல்லும் நீருடன்
சின்னஞ்சிறு மீன் இனங்கள்.
திமிங்கலம் தின்னும் உணவே அந்த சின்னஞ்சிறு மீனினமாம்!
கடலில் நீந்திய வாறு உணவுண்டு
கவலை இல்லாமல் கழித்த காலம்!

இன்று வாயைத் திறந்து நீந்திப் போனால்,
உள்ளே செல்வது சிறுமீன் அல்ல,
நெகிழிப் பையும்
குப்பை மூட்டையும்......
திறந்த வாயின் உள்ளே சென்று வயிற்றைக் குடலை அடைத்துக் கொண்டு,
கொல்லும் நோயாய் மாறிடுமே அந்தப் பெரிய மீனுக்கு..
இறப்போடில்லை இத்துன்பம்,
இறக்கும்வரை நோவில் துடிக்கும் திமிங்கலம்....

கையைவிட்டு பறக்கும் பையும்
குப்பை அடைத்த நெகிழி மூட்டையும்
ஆற்றில் கலந்து கடலில் சென்று மீனைக் கொல்லும்!

வேண்டவே  வேண்டாம் நெகிழிப்பை!
மக்கா குப்பை மறுசுழற்சி
சுற்றுச் சூழல் காத்திடுமே!
நாமும் வாழ்ந்து வேறினம் வாழ உதவிடுவோமே!

👇🏼

சமீப காலங்களில் அடிக்கடி கடற்கரையோரம் இறந்து கிடந்த திமிங்கலங்கள் என்ற செய்திகளை யூட்யூபில் பார்க்கிறோம்.
எதனால் அவை இறந்தன என்று வயிற்றை அறுத்துப் பார்த்தால் வயிற்றை அடைத்து க்கொண்டு நெகிழிப் பைகளும் குப்பை மூட்டைகளும் கிடந்தன.
நாம் குப்பைகளாக எறியும் மற்ற பல பொருள்களான ப்ளாஸ்டிக் ஷீட்களும் இருந்தன.
இவை எதோ வழியாக கடலில் சென்று மிதந்து கொண்டிருக்கின்றன.

கடலில் இப்பொழுது இது மாதிரி டன் கணக்கில் குப்பைகள் மிதப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இது எதையும் அறியாத அந்த திமிங்கலம் தன் வழக்கம் போல வாயைத் திறந்தவாறு கடலில் நீந்தி, எப்பொழுதும் போல உணவு உண்ணுவதாக நினைத்துக்கொண்டு இந்த பைகளை எல்லாம் விழுங்குகிறது விழுங்கிக் குடல் அடைத்துச் சாகிறது .

ஏதும் இல்லை என்று நினைத்து வீசுகிறோம் பிளாஸ்டிக் பைகளை இது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கிறது என்று நாம் அறிவதே இல்லை இந்த செய்திகள் கூட எங்கோ ஒன்று யூடியூப் போன்ற சேனல்களில் தான் வருகிறது.

ஆறு அறிவு மனிதர்களாக இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைப்பதுண்டு.







Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி