சமநிலைஅமைதி



சமநிலைஅமைதி

மனதின்
இன்ப நிலை துன்ப நிலை 
கோபநிலை தாபநிலை
வெளிவராத முகநிலை
அதுவே சமநிலை,
முகவெளிசமநிலை 

அந்த
முகநிலை சமநிலை
உள்ளே சென்று
இன்பநிலை துன்பநிலை எந்நிலையிலும்
மன நிலை சமநிலை
அடைந்தால்
நான் அடைந்தால்
வேறெந்நிலையும் நான் வேண்டேன் ....


👇🏼
பொதுவாக எனக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம்,
அதை உடனே காட்டியும் விடுவேன்.
கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகள் அடிக்கடி வரும், முகத்திலும் உடனே தெரியும்.

கோபமும் எரிச்சலும் வருவதென்பது ஒன்று, அது முகத்தில் தெரிவது என்பது இன்னொன்று.
கோபம் வருவதும் அவ்வளவு நல்லதல்ல, வந்த கோபத்தை அடக்குவதும் நல்லது அல்ல...

அது உள்ளுக்குள்ளேயே ஒரு அமிலம் மாதிரி வேலை செய்து கொண்டிருக்கும்.

கோபம் வராமல், எந்த சூழ்நிலையிலும், அந்த சூழ்நிலையை மனதிற்குள் பரிசீலனை செய்து பிறகு அதற்கு தகுந்தவாறு நம் எதிர்வினை இருத்தல் நல்லது.

இது ஒரு பக்கம் இருக்க,
நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்... கோபம் இருக்கும் மனதுக்குள் ஆனால் முகத்திலும் குரலிலும் அது தெரியாது,நான் அவர்களை மிகவும் பிரமிச்சு பார்ப்பேன் !

Composure எனக்கு மிகவும் பிடித்த ஒரு குணநலன்.. மனதிலும் சரி முகத்திலும் சரி.
அநேகமாக நான் போய் சேர்வதற்குள் அதை அடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன்
😊



Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓