தம்பதி
தம்பதி
இல்லத்தருகே ஓர் ஆதர்ச தம்பதி
உழைத்துண்ணும் தகுதியிழந்து
பின் வந்த காலமிது..
சுற்றிருப்போர் உதவியால்
உயிர் வாழும் நேரமிது
சேகரித்த உணவினை மனைவியானவள்
கணவர் வரும் நேரம்வரை
காத்திருந்து பகிருவார்.
வயிறார வருமுணவு சில நேரம்
பற்றாக்குறையுமுண்டு பல நேரம்,
எந்நேரமென்றாலும் உணவில் பாதி
மனம் கவர்ந்த அழகனுக்கு
கரம்பிடித்த கணவனுக்கு
அந்த அழகர் வரும் நேரமோ
உணவு நேரம் மட்டுமே
மற்ற நேரம் எங்கெங்கோ
வேலையாகச் செல்லுவார்
வெறுங்கையோடு திரும்புவார்.
உண்ணும் ஒரு முறையும்
உண்டு அழகான குடும்பத்தில்
தானுண்டு பிறகளிப்பார் அவருக்கு
அவர் உண்ட பின் தானுண்டு மகிழ்வார் சில நேரம்.
இவரைப்போல மனைவி
அமையுமோர் அதிர்ஷ்டம்
அதிகம் பேருக்கில்லையே
அடப்பாவம் நீங்களே
அழகில்லா ஆண்களே!
உணவு நேரம் முடிந்து
உறங்கப் போகும் போது
கதவின் அருகில் வந்து
நன்றி கூறும் மனைவி
மியாவ் !மியாவ் !மியாவ்!
👇🏼
நானும் என் தாய் வீட்டுக்கு வீட்டு வேலை உதவிக்கு வரும் தெய்வானை அவர்களும் அடிக்கடி பேசிக் கொள்வோம் இந்த தம்பதியைப் பற்றி,
இந்த மனைவியை போல் நாம் என்றாவது இருந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு
சுமாரான மனைவி அழகான கணவர்
அவர்கள் உணவு பழக்கவழக்கங்கள் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்!
இந்த சிறிய பாடல் அவர்களுக்கு சமர்ப்பணம் 👆
Comments
Post a Comment