கல்வி



கல்வி


என் இளைய மகன் சிறு வயதில் பள்ளி செல்லும் பொழுது ஜோகிரபி என்னும்பூகோளவியல் புத்தகத்தைப் பார்த்து கொஞ்சம் கோபம் கொள்வான்,
 'இதையெல்லாம் நாங்கள் எதற்கு படிக்க வேண்டும்?..
இதனால் எனக்கு என்ன பிரயோஜனம்' என்று கேட்பான்..

பல நேரங்களில் அவன் கேட்டது சரி என்று தோன்றுகிறது. கிட்டத்தட்டப் பதினேழு வயது வரையில் கல்வி என்னும் பெயரில் பல விஷயங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன.
அதைக் கொஞ்சம்  குறைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு ஏதுவாக சிலவற்றை சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.

என் தாய் பத்தாவது வரையில் தான் படித்திருக்கிறார்.
என் தந்தை இன்ஜினியரிங் படித்து இருந்தார்.
என் தாய்க்கு இருக்கும் மதி யூகமும் பிறரைப் புரிந்து கொள்ளும் மனோபாவமும், என் தந்தைக்கும் எனக்கும் கொஞ்சம் குறைவு.

ரொம்பப் படித்து எங்களுக்கு அறிவு மழுங்கி விட்டது என்று என் தாயார் அடிக்கடி கூறுவார்கள்!
ரொம்பப் படிச்சவங்க இப்படித்தான் இருப்பாங்க என்றும் பல நேரங்களில் கிண்டல் செய்திருக்கிறார்!
அவர் கூறியதில் தவறு ஏதும் இல்லை என்று இப்பொழுது தோன்றுகிறது.
அறிவை வளர்த்து உலகப் பார்வையை விசாலமாக ஆக்கி இருக்க வேண்டிய கல்வி அறிவை மழுங்கடித்து விடுகிறதா?

👇


கல்வி

கற்றல் என்பது கல்வி
கல்வியைத் தருவது உலகு,
ஞானம் என்பது வேறு
பெற்றுத்தருவது சிந்தை,
விஷயம் என்பது அறிவு பல
அறிவைத் தருவது பள்ளி..


பள்ளி நடத்துவர் மனமிருந்தால்
அதுவும் உலகம் ஆகக்கூடும்,
கல்வியும் அங்கே கிடைக்கக்கூடும்!
பரீட்சை மட்டும் குறி எனக் கொண்டு
ஏட்டைப் படித்து வருவதனால்
கல்வியும் ஞானமும் மறைந்ததிங்கே.
உலகின் சரித்திர மேடையிலே ஏட்டுக்கல்வி அதிகமில்லா மேதை பலரைக் கண்டோமே... ஏட்டுக்கல்வி கொடுத்திருந்தால் அவர்கள் கதி? ஐயகோ! பேதை எனப் போய் இருப்பாரோ!?

வாழ்வின் சாரம் புரிவதற்கே
ஆண்டு அறுபது தேவையிங்கே,
இளமைக் கல்வி நன்றிருந்தால்
வாழ்வில் ஞானம் வந்திருக்கும்..

ஞானம் நிறைந்த வாழ்வே
தர வேண்டி நின்றேன் பிரபஞ்சமே!!

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி