முயல்

மருத்துவ பத்திரிக்கைகளில் சில கட்டுரைகள் படிக்கும் பொழுது முயலின் கண்ணில் மருந்து ஊற்றிப் பார்த்தது அதில் இந்த ரிசல்ட் வந்தது என்று எழுதி இருப்பார்கள் படிக்கும் போதே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.

அதுபாட்டுக்கு காட்டுக்குள்ள சந்தோஷமா இருந்துட்டு இருந்த முயல புடிச்சிட்டு வந்து
லேபில் கூண்டுக்குள் அடைத்து வைத்து , கண்ணுக்குள்ளே தோல் மேலே கண்டதெல்லாம் ஊற்றி அது புண்ணு ஆனதுக்கு அப்புறம் சாக வச்சுடுவாங்க

அத வச்சி ரிசல்ட்ஸ் பப்ளிஷ் பண்ணுவாங்க...

இதுல  கொஞ்சம் கூட நியாயம் இருக்குன்னு தெரியலை எனக்கு
...
கிட்டத்தட்ட இதே மாதிரிதான்அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்...

ரொம்ப மோசமான வார்த்தையில் சொல்லப்போனால் இது வந்து மனுசனோட திமிரத்தான்
காமிக்குது.

👇

முயல்

நீளக் காதும் குட்டை வாலும்
தெறிக்க ஓடும் காட்டில் முயலும்
துடிக்கும் மூக்கில் வேற்று வாசனை அடித்த உடனே....!
இருந்தும் வாழ்க்கை
இனித்தது காட்டில்.

இன்றோ முயல்சிறையில் கைதி
மாட்டிக்கொண்டது சோதனை சாலையில்..

தோலில் பூசினார்
கண்ணில் ஊற்றினார்
மருந்துகள் ஆயிரம்
மனிதன் தோலும் மனிதன் கண்ணும்
ஏற்குமா மருந்தினை என்றறிந்துகொள்ள.

புண்ணான தோலும் குருடான கண்ணும்
முயலுக்குத் தானே பரவாயில்லை
எண்ணிணானே சோதனையாளன்..
அவனுக்கு இருப்பது அறிவுகள் ஆறு
முயலோபாவம் ஐந்தே அறிவு.

அந்த மருந்தும் அழகுப் பொருளும்
சோப்பு ஷாம்பூ போன்றவையாவும்
வேண்டாம் நமக்கு
என்பது என் எண்ணம்
தோழா தோழியரே...
உங்கள் எண்ணம் என்னவோ?




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி