உறவில் ஒரு விதம்

திருமணம் என்ற பந்தம் பல வருடங்களாக உலகத்தில் இருக்கின்றது, ஒருவேளை பல்லாயிரம் வருடங்களாக கூட இருக்கலாம்

இதில் திருமணம் ஆகும் பொழுது வேறு  ஒருத்தர் வந்து அமர்ந்து நமக்கு சில மந்திரங்களைச் சொல்கிறார் அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என்று கூறச் சொல்கிறார்.....
நானும் கண்ணை மூடிக்கொண்டு கூறினேன்...

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் திருமணபந்தம் ஆரம்பிக்கும் பொழுதே சம்பந்தப்பட்ட பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் போல செய்து கொள்வது நலம்

பொதுவான சில வரைமுறைகள் இருந்தாலும் அதில் அவர்களுக்கு தகுந்தார்போல் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஆரம்பம் முதல் அந்தப்பெண்ணும் மாப்பிள்ளையும் திருமண உறவில் தாங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்து கொள்வது மிகவும் நல்லது

பல நேரங்களில் ஏற்கனவே பல வருடங்களாக இருக்கும் திருமண உறவுகளை நாம் பார்க்கிறோம்.....
அம்மா அப்பா தாத்தா பாட்டி என்று........
அந்தக் கணவனும் அந்த மனைவியும் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல் தான் நமக்கும் இருக்கும் என்று நம்மை அறியாமல் அடி மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
பல இடங்களில் கணவன் மனைவி சண்டை வருவதற்கு இது ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்..அடிமனதில் உள்ள எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவது.......

என்னைப் பொறுத்தவரை உலகில் பல துன்பங்களுக்கு காரணம் மனதில் உள்ள எதிர்பார்ப்பு.
பொதுவாக எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாதவரை நாம் பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் முக்கால்வாசி நேரம்......

👇

உறவில் ஒரு விதம்

கணவன் மனைவி உறவு
மிக மகிழ்ச்சியான உறவாக,
சுலபமாக ஆகக் கூடும்
இருவர் மனது வைத்தால்!

மணந்து கொண்டது நாம் இருவர்,
மற்றோருக்கு வேலை இல்லை
சொல்ல ஏதும் உரிமை இல்லை!
மணம்புரிந்தவர்  நாமேயன்றி
அவர்கள் எல்லாம் அல்ல!

மேலே வருவது யார்
கீழே  இருப்பது யார்?
வீட்டில் வேலை செய்வார் யார்
வெளியில் வேலை பார்ப்பார் யார்?
எல்லாம் அவரவர் விருப்பப்படி!
உருண்டையான உலகத்திலே
மேல் என்றாலும் கீழ் என்றாலும் ஒன்றேயல்லவா?
மேலும் கீழும் என்பதெல்லாம்
கண்ணோட்டமன்றி வேறுண்டோ?

குழந்தை பார்ப்பது நான்
சமையல் செய்வது நீ. அவ்வப்போது மாறக்கூடும்,
இந்தச்  சட்ட திட்டம்....
எதுவென்றாலும் ஏற்றுக் கொண்டால்  மிச்சமிருப்பது மகிழ்ச்சியே!

கூடப்பிறந்ததும்,  சொந்தமும்,
தானே வந்த உறவாகும்.
நாமே தேடிக்கொண்டது கணவன்-மனைவி உறவாகும்
நட்பைப்போலே இதுவுமாகும்!
பார்க்கப்போனால் இதுவும் இன்னொரு நட்பே என்றாகும்!
நட்பில் ஏது கௌரவம்,
உயர்வென்றாலும் தாழ்வென்றாலும்
இருவருக்கும் பொதுவானதே!

நண்பன் எது செய்தாலும்
அது தவறாயிருந்தாலும்,
உடனும் இருந்து தட்டியும் கேட்பான்,
அவனே நல்ல நண்பன்!

உறவின் ஆரம்பத்தில்
போடும் ஒப்பந்தத்தில்,
விதிமுறையாவும் நாமே போட்டு
இருவரும் முழு மனதோடு
சம்மதம் எடுத்தால் ஒரு மனதாக,
உன்னதமாக ஆகக்கூடும்
புதியதான உறவிதுவே!
இல்லை கேவலமாகப் போகவும் கூடும்
ஒருவருக்கொருவர் நடத்தையினாலே!

என் எண்ணம் எதுவென்றால்
இந்த உறவில் மட்டும் அல்ல,
ஏனைய எல்லா உறவிலுமே
அந்தந்த நபர்கள் எடுக்க வேண்டும்
அவரவர் சட்டம் திட்டம் எல்லாமே!
எல்லா மனிதர் மனதுக்கும் ஒரே சட்டம் பொருந்தல் ஆகா!
மனிதரில்  குணங்கள்
வெவ்வேறாகும்,
ஒப்பந்தமும் வெவ்வேறானால்
அவரவர் வாழ்க்கை இனித்திடுமே!

மேலே கூறிய யாவும்
என் கருத்தன்றி வேறில்லை
அவரவர் கருத்தும் கூறினாலே
தெளிவு பிறக்கவும் வழியாகும்!










Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓