நீர்



நீர்

சித்திரை மாதம் கத்திரி வெய்யில்,
முற்பகல் நேரம் புத்தகக் கடை
பிடித்தவை கிடைத்தன, போட்டேன் பையில்.
எடுத்தேன் நடையை வீட்டை நோக்கி..

தொண்டை வறண்டது
தண்ணீர் என்றது,
காலை நிரப்பிய பானை நீர்
தெள்ளத் தெளிந்த அருமைத் தண்ணீர்
எடுத்துக்குடித்தேன் தாகம் தீர
குளிர்ந்த நீர்   இறங்கிய  தொண்டை
சிலிர்ப்பில் வந்தது மனதின் பொந்திகை 💦

மற்றொரு நாள் மார்கழி மாதம்
மூக்கைப் பிடித்த நீர்க்கோவை,
என்னை விட்டுப் போகவில்லை
என்னடா இது பெருந்தொல்லை!
ஏதும் வேலை இயலவில்லை
தொண்டை வேதனை பேச்சும் இல்லை,
படுத்தும் உறக்கம் வரவில்லை
காரணம் மூக்கில் நீர் கோவை..

இந்நீர் போக எந்நீர் தேவை ?
வெந்நீரே அது வெந்நீரே !
துளசி சேர்த்த வெந்நீரே ! 🍵
கமறிய தொண்டை புண்ணுடனே,
இதமாய் வெண்ணீர் தொண்டையில் இறங்க,
சூட்டில் வந்தது மனதின்
பொந்திகை!


பொந்திகை: திருப்தி
நீர்கோவை :. ஐலதோஷம்


👇🏼


முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும். ஒரு வருடத்தில் நான்கு முறை... கூடவே தொண்டைவலி காய்ச்சல் எல்லாம் வந்துவிடும்.

தொண்டை வலி இருக்கும் பொழுதெல்லாம் சுடு தண்ணியை போல ஒரு தோவாமிர்தம் எதுவும் இல்லை என்று தோன்றும்.
இல்லையென்றாலும் கூட எனக்கு சுடுதண்ணி பிடிக்கும், உணவிற்குப் பிறகு வெந்நீர் குடித்தால் வயிற்றுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும்.

அதேபோல் வெயில் காலத்தில் பானைத் தண்ணீர் போல் அமிர்தம் எதுவுமில்லை.
ஆனால் புதுப்பானையில் தண்ணீர் ஊற்றி குடித்தால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள்.

குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீர் ஜில்லென்று இருந்தாலும் அதில் ருசி ஒன்றும் இருக்காது.

அதிலும் சிறுவயதில் நாங்கள் கோவையில் இருந்த பொழுது, சிறுவானித் தண்ணீர் வரும்.  அதைப் பானையில் ஊற்றி வைத்து வெயில் காலங்களில் குடிப்போம், உண்மையில் நீரில் சர்க்கரை கலந்தது போலவே இருக்கும்.

அதெல்லாம் ஒரு காலம்... என்று சொல்லத் தோன்றுகிறது இப்பொழுது.

அனைவர் வீட்டிலும்RO என்னும் வடி கட்டி வந்துவிட்டது ,
தண்ணீரே செயற்கையான மாதிரி இருக்கிறது......என் கற்பனையா இல்லை இதுதான் உண்மையா தெரியவில்லை.

வயதானவர்கள் எல்லோருமே
" அந்த காலத்தில்".... என்று கூறுவது போல நானும் சொல்கிறேனோ?😁

👇




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி