வெந்தயம்



வெந்தயம்

சின்னஞ் சிறிய தங்கக் கட்டிகள்
வெந்தயம் என்று பெயராம்
வட சட்டியில் வறுத்துப் போடு
சிவந்து போகும் தங்கங்கள்!

மின் அம்மியில் போட்டாலே
மணக்கும் பொடியும் கிடைத்திடுமே
சுடச்சுட சோற்றில் உப்பும் நெய்யும்
சேர்த்துப் பிசைந்து உண்டாலே
குடலும் சுத்தம் ஆகிடுமே!

அடுப்பில் நெய்யைக் காய்ச்சி
பட்டை கிராம்பு வெந்தயம்
பாதிப் பாதி வெங்காயம்
சிறிதளவே தக்காளி
பச்சைமிளகாய் கறிவேப்பிலை,

வதக்கிய பின்னால் அதனுடன்
நீரும் அரிசியும் சேர்த்து
வேகவைத்து உண்டால்
மணக்கும் வெந்தய சோறாகும்!

எதுவென்றாலும் பரவாயில்லை  அதனுடன் நானும் போவேனே
என்று கூறும் தேங்காய் சட்னி
இதனுடன் போகும் அழகுடனே!

மண்ணில் வெந்தயம் விழுந்தால்  இரண்டே நாளில் கீரை வரும்,
பருப்பும் கீரையும் சேர்ந்த கூட்டு சோற்றுடன் கலந்து புசித்தாலே  ருசியும் சத்தும் சேர்ந்தே வரும்!

வெந்தயெக் கீரை மாவுடன் பிசைந்து
அனைவரும் விரும்பும் சப்பாத்தி,
நெய்யும் சேர்த்து மணமணக்க
தயிரைத் தொட்டு உண்டாலே
மறக்கமுடியா உணவாகும் !

புளியில் செய்யும் சமையலும்
எதுவாகவே இருந்தாலும்,
வெந்தயப் பொடியும் போடலாம்
மணமும் இன்னும் கூடும்!

அருமை அருமை வெந்தயமே
மருந்தும் உணவும் நீயம்மா!!


👇🏼

நமது உணவுத் தயாரிப்புகளில்  மணத்துக்காக சேர்க்கும் பொருட்களில் வெந்தயம் பெருங்காயம் இஞ்சி பூண்டு மிளகு மிகவும்  பிடித்தவை எனக்கு.

இஞ்சி கருவேப்பிலை இரண்டும் இல்லை என்றால் எனக்கு சமைக்கவே பிடிக்காது, அதுவும் கருவேப்பிலை அன்று பறித்ததாக இருக்க வேண்டும்..

வெந்தயம் எனக்கு சமீபத்தில் மிகவும் பரிச்சயமானது, நாம்  எப்பொழுதும் இட்லி மாவுக்கு போடுவோம், அது ஏற்கனவே தெரிந்ததுதான்.
சமீபத்தில்  எனக்குத் தெரிய வந்த ஒரு உணவுப்பொருள் வெந்தய சாதம்.

இன்னொன்று நானே செய்த வெந்தயப் பொடி....

மேத்தி சப்பாத்தி என்று கூறப்படும் வெந்தய சப்பாத்தி அருமையான ஒரு உணவு அதுவும் அந்த மாவில் பூண்டு சேர்த்து செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

தொட்டுக்கொள்ள தயிரும் ஊறுகாயும் பிரமாதம்...

மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் பொழுது மருந்துகள் பற்றிய ஃபார்மசி பாடத்தில், அட்சர்பெண்ட் என்ற ஒரு குணநலன் பற்றி படித்திருக்கிறோம்  kaolin என்ற பொருள் வயிற்றுப்போக்குக்காக அந்த காலத்தில் கொடுக்கப்பட்டது

Kaoilnனின் அட்ஸார்பண்ட் தன்மையினால் அது குடலில் இருக்கும் பாக்டீரியாவில் இருந்து வெளிவரும் நச்சுப்பொருட்களை உறிஞ்சிக்கொள்ளும்.

வெந்தயத்தை சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அதன் மேல ஜெல் போல உருவாகும் வழவழப்பாக... அதற்கு adsorbent குவாலிட்டி இருக்குமோ என்று எனக்கு ஒரு எண்ணம் .

அதனாலே குடல் பிரச்சினைகளுக்கு வெந்தயத்தை ஊறவைத்து நான் கொடுப்பேன்.

சும்மா கூட வறுத்து சாப்பிட்டு விட்டு மேலே நீர் குடித்துக் கொள்வேன்.......





Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி