உதவிக்கு வந்த மணாளன்
மணாளன் ஃப்ரைடே
வலைப்பதிவும் முகநூலும் விருப்பமாய் நான் கேட்க
அறிமுகம் செய்தது யாரம்மா
சேரன் செல்வகுமாரனவன்
என்னை மாலையிட்ட மணாளனவன்
திருத்தங்கள் செய்வது யாரம்மா
அதுவும் அவனேதானம்மா
சம்பளமில்லா வேலைக்காரன்
கணவன் அன்றி யாரம்மா
நன்றிகள் உண்டு அவனுக்கு
நயமாய் சொல்லிக் கொடுத்ததற்கு
நான் மருத்துவத் தொழிலைப் படிக்காமல்,
எழுத்து தொழிலை எடுத்திருந்தால்
இன்னும் நன்றாய் இருந்திருக்கும்
கூறுகிறார் இந்தக் கனவான் !
எனக்குத் தோனுவதென்னவென்றால்
எதற்கும் ஒரு நேரம் உண்டு
அது நடக்க ஒரு காலம் உண்டு !
எழுத வந்த நேரமிது
இதுவே நல்ல நேரமென்று
வலைப்பதிவிலும் முகநூலிலும் என் எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்பிய பொழுது, இதுபோன்ற விஷயங்களில் துளிக்கூட அறிமுகமில்லாத எனக்கு, 3500 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் செல்வகுமார் (கணினி மென்பொருள் விஞ்ஞானி) கைப்பேசியின் மூலம் எனக்கு உதவினார். - அவர் என் கணவரும் கூட.
சினிமா பார்ப்பதற்கு மட்டுமே நான் என் 'மேக்' (Mac) கணினியைப் பயன்படுத்தி இருக்கிறேன், ஆனால் நான் அதற்கு போட்ட பணத்திற்கு மேலேயே அது எனக்கு சினிமா காண்பித்து விட்டது. அவ்வளவு தூரம் நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன்-சினிமா படங்களை. பல நாட்களில் வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் சினிமாதான். அதன் மூலம் நான் எழுதுவேன் என்று நிச்சயமாக நினைத்ததில்லை. இப்பவும் அதன்மூலம் எழுதவில்லை.
😄 கைப்பேசி மூலம் எழுதினேன்.
!
Comments
Post a Comment