சிலந்திவலை



சிலந்தி வலை


வீட்டை சுத்தம் செய்ய எண்ணி
துடைப்பக்கட்டை கையில் எடுத்து
தரையைப் பெருக்கி மெழுகினேன்
அரக்கப் பறக்க ஓடினேன்
அங்கும் இங்கும் துடைத்தேன்
பளபளவென்று மின்னும் தரை
பார்க்கப்பார்க்க மகிழ்ச்சி


அண்ணாந்து பார்த்தால் மின்விசிறி
அழுக்குப் படிந்த மின்விசிறி
அதையும் துடைத்து முடித்தேன்.
புத்தகம்அடுக்கிய அலமாரி
தூசி தட்டி துடைத்தேன்
மீண்டும் அழகாய் அடுக்கினேன்
மேசை நாற்காலி அனைத்தும்
மேலும் ஒரு முறை துடைத்தேன்.

எல்லாம் முடித்து வந்தேன்
கையில் சூடாய் தேனீர் கோப்பை
கண்களை மூடி சுவைத்தேன்,
அப்பாடா வென சாய்ந்தேன்.
விழிகளைத் திறந்து மேலே பார்த்தேன்
அங்கங்கே சில வலைகளைக் கண்டேன் -
சிலந்தி வலைகளைக் கண்டேன்

வேகம் கொண்டு எழுந்தேன்
ஒட்டடை குச்சி கையில் எடுத்து
வலையின் மேலே வைத்தேன்
சிதறி ஓடின சிலந்திகள்
அதிர்ந்து நின்றன கைகள் !

ஓடி ஓடி சிலந்தி கட்டிய
கூட்டை நாம்தான் கலைப்பதா
வீட்டை சுத்தம் செய்ய வேண்டி
சிலந்தியின் குடியைக் கெடுப்பதா?
சுத்தமா.. இல்லை ..சிலந்தியா ?
கேள்வியில் தவித்தேன் ஒரு வினாடி 

சிலந்தியென்ற முடிவு
மனதின் உள்ளே வந்ததும்
உடனே வந்தது நிம்மதி !
இரண்டாம் கோப்பைத் தேநீருடன்
மீண்டும் கண்களை மூடினேன்!
சிந்தனை மெல்ல விழித்தது....
சுத்தம் என்பதுமொரு கண்ணோட்டம் தானோ? ??
☺️

👇🏼

திருப்பூரில் கண் மருத்துவமனை நடத்திக்கொண்டிருந்த பொழுது, அதில் நான்கு அறைகள்.. 
ஒன்று நோயாளிகள் அமர்வதற்கு 
ஒன்று என்னுடைய கன்சல்டிங் ரூம்  
மீதம் இரண்டும் ஆபரேஷன் தியேட்டர் சம்பந்தப்பட்டவை.

என்ன காரணம் தெரியவில்லை கன்சல்டிங் ரூமிலும் வரவேற்பறையிலும் அடிக்கடி சிலந்தி கூடு கட்டிக் கொள்ளும்.

உதவிக்கு வந்த பெண் அதை சுத்தம் செய்யும் பொழுதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இருக்கும் சிலந்திகள் அங்கும் இங்கும் சிதறி ஓடி பார்க்க மிகவும் பாவமாக இருக்கும் 

நான் சொல்லிடுவேன் அது எல்லாம் முடிச்சுட்டுப போனப்புறம் காலி வீட்டை மட்டும் தான் சுத்தம் பண்ணனுமின்னு

 சில நேரங்களில் நோட் பண்ணி இருக்கேன் கொஞ்ச நாள் குடியிருந்ததற்கு அப்புறமா அந்த வலையில் சிலந்தி இருக்காது

 அதனுடைய ஆயுசு முடிஞ்சிடுச்சா இல்ல வேற பக்கம் போயிருச்சான்னு தெரியல

 அதனால அது காலி பண்ணிப் போனதுக்கப்புறம் தான் சுத்தம் பண்ணுவோம்.

சில நேரங்களில் அதையும் மீறி சில சிலந்திகள் சாக நேரிடும் 
இத நினைச்சுட்டு இருந்தபோது நான் எழுதின பாடல் மேலே!











Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி