அவுத்து விட்ட நாளிலிருந்து வரும் எண்ணங்கள்



அறிமுகம் சுவையாய்....
அறிமுகம் சுவையாய்....
🐧

முகநூலில் நான் சேர்ந்து
மாமாங்கம் ஒன்றாச்சு!
ஆனால் -
முகநூல் பக்கம் நானில்லை
இதுவரை எட்டிப் பார்த்ததில்லை.

முகநூலென்றால் என்ன அது !
முகம் வரவேண்டும் என்பாரோ?🙄
எனக்கது ஆகாதம்மம்மா!
என்செய்வேனே  நானம்மா?🤔

ஆனால்
என்னை படைத்த முதலோனை
பார்த்து வணக்கம் சொல்லும் முன்
உடனிருக்கும் தோழர் தோழியருக்கு
எண்ணம் பகர வேண்டுமென
என்
எண்ணம் பகரவேண்டுமென
ஆசை மனதில் வந்து
ஆண்டுகள் பல சென்று
அவசரம் வந்தது இன்று !!


ஆகையினாலே இவ்விடத்தில்
அவ்வப்போது சில வரிகள்...
எழுத்து வடிவம்  அ வி க
முடிந்தால் படித்துப் பாருங்கள்
எண்ணம் இருந்தால் கூறுங்கள்-
பதில்
எண்ணம் இருந்தால் கூறுங்கள்
எனதருமை சக மனிதர்களே!!

( இதிலென்ன சுவை
என்போருக்கு
இருக்கவேயிருக்கு
சீனிச்சர்க்கரை
வாயில் கொஞ்சம் போடுங்கள்
விழிகளை சிறிதே மூடுங்கள் )


👇🏼

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்என்னுடைய மருத்துவ தொழிலை நிறுத்தலாம் என்று முடிவெடுத்தேன் எடுத்த முடிவை என் குடும்பத்தாரிடம் கூறிவிட்டு , முடிவை உறுதியாக்கினேன் .
என் கணவரும் இரண்டு மகன்களும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் உனக்கு என்ன விருப்பமோ செய்துகொள் என்று கூறிவிட்டார்கள்.
அந்த நிமிடத்தில் நானும் என் மனமும் அவிக வாக மாறினோம்.

பல வருஷங்களாக என் மனதில் ஓடும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தேன்.

இந்த பிளாகில் பப்ளிஷ் செய்கிறேன்.

விரும்புவோர் படிக்கலாம்
படித்தபின் விரும்பினால் பதில் அளிக்கலாம் 😊








Comments

  1. உங்கள் வலைப்பதிவில் முதல் பின்னூட்டம் இட்டதில் எனக்குப்பெருமை.
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
    இவன்
    வழிப்போக்கன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

மாட்டுப் பொங்கல்

நகரும் 🐌 நத்தை

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

பக்திப் படம்