Posts

Showing posts from October, 2020

நனிசைவ தயிர் Vegan curd

Image
  பச்சை வேர்க்கடலையும் ஒரு  தேக்கரண்டி அரிசியும்  ஆறு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து  வடித்து எடுத்துக் கொதிக்கவிட்டு  ஆறியபின்  சிறிது எலுமிச்சம் பழச்சாறும் மிளகாய் காம்பும் கலந்து வைத்தால்  12 மணிநேரம் கழித்து அருமையான தயிர் தயார்! தயிர்சாதம் இனிப்புத் தயிர் மோர் மற்றும் பச்சடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.... Vegan curd Soak ground nuts with a small quantity of rice for 6 hours  grind in a mixie  filter  let it cooldown   mix lime juice and few chilli stems leave overnight creamy curd will be ready by morning  can make curd rice ,raitha,or lassi or buttermilk .... சுயசிந்தனை கன்றுக்கென சுரந்த பாலைக்  கறந்து கலந்து குடிக்க, கன்றுக்குட்டியல்லவே நானும்? 🤔 சிந்தையில்  சொந்தமாய் சிந்தனை வந்தது- பல்லாயிர வருடமாய்ப் பழகிவிட்டோம் என்றாலும், பசுமாட்டின் கன்று நானில்லை,  பசுவின்பால் ஏனருந்தவேண்டும்? விட்டுவிட்டேன் கன்றுக்கதை! 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 The act of thinking What liberated women, who were second to men in many parts of the world for centuries..?? It was the thought process  o

Almond coffee பாதாம் பால் காபி

Image
 For Non vegetarians Vegetarians and Vegans👇 Almond coffee  soak almonds for minimum four hours grind with some water (amount of water is your choice more for thin  and less for thick) filter it heat without boiling on a slow flame with constant stirring add to coffee dicoction   have it hot or keep in the fridge and have it cold. it is convenient because - thickness is our choice  can make at anytime even at midnight  don't have to wait for milk man Wonderful taste and flavour பாதாம் பால் காபி பாதாம் பால்  நான்கு மணி நேரம் ஊறவைக்கவும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும் வடிகட்டி பால் எடுத்து அளவான தீயில் கலக்கிய வாறே சூடு பண்ணி (கொதிக்க விடக்கூடாது)  காபி டிகாக்க்ஷனுடன் கலந்து சூடாகக் குடிக்கலாம்.  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்லென்ற காப்பியாகவும் குடிக்கலாம் (அரைப்பதற்கு நீர் அளவு நம் விருப்பப்படி) இதில் உள்ள வசதிகள்  நினைத்த நேரம் செய்யலாம் அடர்த்தியாக செய்யலாம் பால்காரர் தேவையில்லை அருமையான சுவை.

அன்பு மனிதர் மாறுவதேன்

Image
பால் பொருட்களைை ☝️விட்டுவிடுவதே உண்மையான சைவம் - நனிசைவம் அன்பு மனிதர் மாறுவதேன்? அன்புடை மனிதர் அனைவரும்தான் அசைவம் உண்ணும் மனிதருமே, உண்பவர் யாரும்  அரக்கர் அல்லர்! அன்றாட வாழ்வில்  அவரைக் கண்டால் அவர் எல்லா மக்கள் சுற்றத்துடனும், அன்பும் பரிவும் துணை கொண்டு, பாசம் மிக்க உணர்வோடு, நெஞ்சம் நிறைந்த வாஞ்சையுடன், பழகும் தன்மையுடையவரே. தானுண்ணல் அல்லால் பிறருக்கும்,  பகிரும் மேன்மை உடையோரே. வாடும் மனிதர் யாவருக்கும் ஓடிச்சென்று உடனுதவும் உத்தம குணம் படைத்தவரவர். அக்கப்போர்கள் இல்லாமல் பக்கபலமாய் இருப்போரே, குடும்பம் குழந்தை குட்டி யென்று வாழ முயலும் நல்லோர். ஈன்ற தாய், தந்தையரை பேணிக்காக்கும் நல்மக்கள், இவர் அனைத்து மனிதர் போற்றி விரும்பும்  மேன்மையுடைய மக்களே! இருந்தும் ஊணை உண்ணுகிறார், இதன் காரணம் என்ன கேளுங்கள்... ஆடு கோழி மீன் என்று, தானே கொன்று உண்ணச் சொன்னால் தயக்கம் கொஞ்சம் காண்பிப்பார், வேறோர் கொன்று, கொண்டு கொடுத்தால் வாங்கித்தானும் தின்று முடிப்பார். இவரிடம் நானும் ஒன்றே ஓன்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன், இயல்பாய் மனதில் பொங்கும் அன்பை மனிதர் மட்டுமல்லாது,  ஏனைய உயிர்கள் எல்

அழகு

Image
 அழகு கோடிக்கணக்கில் உயிரைக்கொன்று கட்டி எழுப்பிய கோட்டை, ஆசையில் அனைவரும்  விரும்பிக் கட்டும் பட்டெனும் பகட்டுக்கோட்டை! சிற்சில நேரம் உடுத்திவிட்டு சட்டென வீசி எறிந்துவிடும்,  பட்டுப்புடவை ஆசைக்காக, செத்து மடியும் பல கோடி உயிரை  சிந்திக்கவேண்டும் சின்னத்தங்கம்! வினாடி ஆசை நமக்கது வாழ்க்கை போவது புழுவுக்கு, வினாடி ஆசையில் வீழ்கிறது  பாவம் அறியாப் புழுவின் வாழ்வு! பருத்திப் புடவை உடுத்தி சென்றால் பளபளப்பில்லை என்பது குறை! பட்டினும் விலை குறைந்தது பட்டைப் போல மின்னும் செயற்கைப் பட்டு புடவை!  உடுத்திச்செல்வதிலென்ன  குறை? குறைந்த விலை ...அதே குறை! பணத்தைக் கொட்டி பளபளப்பாக  மின்னிக்கொண்டு நாம் செல்ல, பல்லாயிரம் பட்டுப்பூச்சிகளைக், கொன்று குவிக்கும் நாமெல்லாம் அரக்கரன்றி யாரம்மா? 🤔🤔🤔                      அழகு ஒரு சுமார் இருபது வருடங்கள் முன்பெல்லாம் திருமணம், நிச்சயம், சிறுமிகளுக்கு நடத்தப்படும் சீர், போன்ற வைபவங்களுக்கு நான் சென்று கொண்டிருந்த காலங்களில், போகும் பொழுது ஒரு 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' எனக்கு எப்பொழுதுமே இருக்கும். கூட்டங்களை அவ்வளவாக நான் விரும்புவதில்லை, என்னுடைய இயல

விருந்து

Image
  விருந்து பூப்போல் அரிசி சாப்பாடு கடைந்த மொச்சை பருப்போடு,  முழுசாய் பிஞ்சாய் கத்தரிக்காய்  மிதக்கும் எண்ணைக் குழம்போடு, சிவந்த நிறத்தில் பக்கத்தில் வறுத்த உருளைக்கிழங்கும், பருப்புத் தண்ணி தக்காளி சேர்த்து வைத்த ரசமும், வாசத்தோடு வந்தது பாசம் நிறைந்த கைகளிலே, ஜதியுடனாடி வந்தது ஜவ்வரிசிப் பாயாசம், பரந்து விரிந்த அப்பளம்  பக்கம் உப்பும் ஊறுகாய், புதிதாய் பயின்று செய்வித்த, தாவரத்தயிரும் கிண்ணத்தில்! தின்று முடித்துத் திரும்பினால் தாம்பூலத்தில் ஏலக்காய்.. சத்தாய் சுண்ணம் சேர்ந்து சிவந்த வாயில் மணந்தது! இந்தப்பக்கம் திரும்பினால்  இலையோடுண்டு இன்னொரு விருந்து! மணக்கும் மட்டன் பிரியாணி தொட்டுக்கொள்ள பச்சடி, அரைத்த கோழிக் குழம்பும் அரிசிச் சோறும் சேர்ந்து, அவித்த முட்டை அருகிலே வைத்திருக்கும் இலையிலே, உப்பிருக்கு ஓரத்தில் சுக்கா வறுவல் பக்கத்தில், பள்ளிப்பாளைய வறுவலில் பதுங்கியிருந்த வரமிளகாய்! அடுத்து வந்த ரசமும்  எருமைத் தயிரும் கோப்பையில், உண்ட களைப்பு ஓடிப்போக சுக்குக் காப்பி குப்பியில், நாவில் விருந்து சேரும் முன் கண்ணுக்கழகாய்  காட்சி விருந்தாய்! விருந்திரண்டும் அந்த இடத்தில்,  இலையில

நிம்மதியான...

Image
 நிம்மதியான... The pictures show the process of making a vegan omelette...tasted just like an egg omelette. bengal gram flour ( kadalai maavu) chillie pieces chopped onions   curry leaves  salt  turmeric powder mix with water  let it set for a few minutes.   make the ommmeltte on a tawa cook on both sides,  atleast 1-2 minutes for each side . (adding veggies cut into small pieces is an option and if you want a fluffy one you can add some baking soda ) நிம்மதியான..... அதையும் இதையும் உண்ண வேண்டும் என்பதல்ல நனிசைவம், உணவில் சிலதை விட்டால் போதும்  என்றே கூறும் நனிசைவம். சுளுவாய் வாழும் வாழ்க்கை எப்படி என்று சொல்லும், சுகமாய் வாழும் வாழ்க்கை எப்படி என்று சொல்லும்  வழியாம் என்றும் நனிசைவம். முந்திரி பாதாம் பிஸ்தா வென்று உண்ணத் தேவை இல்லை, இட்லி தோசை உப்மாவென்று உண்டால் போதும் என்றும் போல... பருப்பு சாம்பார் கூட்டென்று சோற்றைப் பிசைந்து உண்டுவிட்டு, ரசிமும் ருசித்துப் புசிக்கலாம், பழத்தை மேலே விழுங்கலாம், தயிரும் தேவை என்றால் தாவரத்தயிரை சேர்த்துக்கலாம். மாலை நேரம் மங்கியதும் முறுக்கை நொறுக்

திர(ரு)ட்டு்ப்பால் வேடதாரி

Image
 திர(ரு)ட்டு்ப்பால் வேடதாரி கன்றுக்கென்று சுரந்த பாலை கறந்து சென்று குடித்துவிட்டுக், களவில்லையென்று சொன்னால்- களவென்றால் வேறென்ன? நம்தாயின்பால் நாமருந்தி,  நன்றாக இருக்கின்றோம், பிறகென்ன தேவைக்கு பசுவினத்தின் பாலை பிடுங்கி நாம் குடிக்கின்றோம் ? அன்று பிறந்த கன்றின் இன்றையமையாத் தேவை, கடும்பாலைக் நாம் கறந்து சீம்பாலென கொண்டாடும் கொடுமைக்குப் பெயரென்ன வைக்கலாம் சொல்லம்மா?  பசுவென்ன தாய் நமக்கா, தான் ஈன்ற கன்றுக்கா? நமக்கும் தான் தாயென்றால் வற்றிய பின் அடிப்பதேனோ? அடிமாடென விற்பதேனோ? 🐄🐂🐃  🍼🥛🍼🥛🍶🍶🐄🐂 பாலூட்டி இனங்கள் போன முறை நான் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் தோட்டத்திற்கு சென்று ஒரு நாள் தங்கினோம். எங்கள் தோட்டத்தை குத்தகைக்குத் தான் விட்டு இருக்கிறோம். நாங்கள் அனைவரும் நகரத்தில் வசிக்கிறோம், விவசாயமும் பரிச்சயம் இல்லை, ஆகவே பல வருடங்களாக குத்தகைக்குத்தான் தான் இருக்கின்றது. இந்த முறை சென்று தோட்டத்தில் தங்கிய பொழுது, விடிகாலை  வெளியே வந்தவுடன் ' சடீர் சடீர்' என்று சத்தம் கேட்டு என்னவென்று எட்டிப் பார்த்தால் பசு மாட்டை கட்டி வைத்து பின் புறத்தில் குச்சியால் அடித்து கொண்டி