படமும் புத்தகமும்
படமும் புத்தகமும் 🙇 புத்தகம் ஒன்று படித்தவுடன் திரைப்படம் ஒன்று பார்த்தவுடன் ஏன் என்றறியா ஏதோ மாற்றம் நிகழ்ந்து முடிந்து மனதுக்குள்ளே, சிந்தனை சிறிதே மாறி மேலோரு படி ஏறி, எல்லாவற்றின் மறுபக்கம் என்னைப் பார்க்க வைத்து..... சின்னச் சிறுவன் தம்பியின் மகன் இயன்றான் ஒரு நாள் என்னிடம் வந்து 'கணினியில் ஆடும் விளையாட்டைக் குறைவாய் எடை போடாதே, வாழ்வின் பாடம் அதிலும் உண்டு அறிந்து கொள்வாய் அத்தை நீயே' அதுபோல் ஏதோ தெளிந்து விட்டோம் என்று வந்த தன்னிறைவு! உன்னதமான படைப்பென்றால் இதுவேதானோ அதுவென்று என் மனம் கூறுது அடிக்கடியே! அப்படிக் கூறிய சிலவற்றை பகிர்ந்தேன் இங்கே நண்பர்களே! 12Angry Men திரைப்படமும் Millennium Trilogy புத்தகமும்! 👇👇👇👇👇👇👇👇👇👇👇 🖥️📖📚📀🗞️📕📝🖋️✒️🖌️📜 சில வருடங்கள் முன்பு வரை புத்தகம் படிப்பது அதுவும் கதை புத்தகம் படிப்பது என்றால் கிட்டத்தட்ட ஒரு வெறி போல் எந்நேரமும் படித்துக் கொண்டிருப்பேன். சிறுவயதிலிருந்தே அப்படி ஒரு பழக்கம். நான் படித்த பள்ளியில...