Posts

Showing posts from September, 2020

நனிசைவம்

Image
 நனிசைவம்  🥥😃🥜 வாழ்வின் தர்மம் நனிசைவம்  விடுதலை அளித்திடும் நனி சைவம்.... விலங்கு பறவை மீன் என்று வாழும் யாவையும் வாழியவே நமது உணவு தாவரமே! காலை எழுந்ததும் கடுங்காப்பி, காப்பியில் வெல்லம் போட்டுக்கலாம். காலைக்காப்பியில் கண்டிப்பாகப்  பாலும் எனக்குத் தேவையென்று,  பதறிக் கூறும் மனிதருக்கு,  தயாராயிருக்கு தாவரப்பால்... காப்பி குடித்து நடைப்பயிற்சி, குளித்து முடித்து சிற்றுண்டி.. மல்லிப் பூவாய் இட்டிலி இருக்க மணக்கும் சாம்பார் அருகிலிருக்கு, வெள்ளை நிறத்தில் தேங்காய் சட்டினி, சிவந்த மிளகாய்ப்பொடி யருகில், பொடிமேல் எண்ணெய்- தேங்காய்எண்ணெய், கலந்துண்ணலாம் அனைத்தும் மனம்போல்... மதியம் சூடாய் சோறுண்டு மணக்கும் மொச்சைப் பருப்புண்டு, பருப்பின் நடுவில் நல்லெண்ணெய்  செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, நயமாய் விட்டு நன்றாய்ப் பிசைந்து, கத்தரிக்காயும் முருங்கைக்காயும்  போட்டு வைத்த புளிக்குழம்பு  பக்கம் வைத்துத் தொட்டுக்கலாம், மணக்க மணக்க சாப்பிடலாம்..... பீர்க்கங்காயில் பொரியல் செய்து  தேங்காய் துருவி அதன்மேல் தூவி,  ரசத்தை ஊற்றிக் கலந்த சோற்றில்,  கலந்துண்ணலாம் ரஸத்துடனே. பாசிப்பருப்புப் பாயாசம்,   வெல

ஏன்?

Image
 ஏன்? விலங்கின் உரிமை யான்  பேச காரணம் யாதென சிந்தித்தேன்... கழிவிரக்கம் என்றார் சிலர் கருணை என்று சொன்னார்  சிலர் 🙄 அதுவுமில்லை 🧐 இதுவுமில்லை,  அறிவேன் நானும் அடி மனதில்! தாங்கள் படும் துன்பத்தை வாயைத்திறந்து வார்த்தைகளால், வடிக்க இயலா விலங்குகள்....  அதனால் தானே பேசுகிறேன் அவற்றிற்க்காக நானும் இங்கே, நியாயம் என்றும் ஒன்றுண்டு, நமக்கும் கீழே உள்ளோரை, நலமாய் நடத்த வேண்டுமென்று  நல்லோரன்று சொன்னாரே! நவிலுகிறேன் நானே இன்று காரணம் எனக்கு அதுவே என்று! மனிதனை என்றும் எதிர்க்கவே இயலாதிருக்கும் விலங்கினம்.... அதைக் காக்கா விட்டால் பரவாயில்லை, அழிக்காதிருத்தல் நலமன்றோ? அதைவிடப் பெருநலம், சோதனை என்ற பெயரில் வதைக்காதிருத்தல். எதிர்ப்புகள் ஏதும் பேச இயலா  ஏனைய உயிரினை மதித்திருத்தல், மாட்சிமையன்றோ மனிதனுக்கு! காணொளி -------------------- எங்கள் ஊர் அருகில் காட்டு முயல்களை வேட்டையாட சிலர் இதுபோன்ற  நாய்கள் பலவற்றைக் கூட்டி வந்து பொறி வைத்துள்ளார்கள். போலீஸ் அவர்களை பிடித்து கைது செய்துவிட்டு, நாய்களை அவிழ்த்து விட்டு விட்டனர். ஊர்ப்பக்கம் ஒரு சுமார் இருபது நாய்கள் போல அலைந்து கொண்டிருந்தன... புது

வளர்ப்பு நாய்

Image
  ஆப்பிரிக்கக் கிளி 👆 வளர்ப்பு நாய் சுதந்திரமாக சுற்றித்திரிந்த விலங்கினை வளைத்து வீட்டில் வைத்து,  செல்லம் கொடுத்தே வளர்த்தாலும், அடைத்து வைத்தது வைத்ததுதான்,  தொலைத்த சுதந்திரம் தொலைத்ததுதான்! வாழ்வின் மூச்சு சுதந்திரமே,  அதில்லையெனில் அது வாழ்வே இல்லை  சாவுக்கிணை ஆகிடுமே! மனதின் சுமைகள் அனைத்தையும் செல்லப்பிராணி குறைத்திடும்.... என்ற எண்ணம் பரவிப் போனதாலே, செல்லப்பிராணி சிக்கிக்கொண்டது  சுயநலமான மனிதனிடம்! பழகிப்போனது பரவாயில்லை என எண்ணியெடுத்து வளர்த்தாலும், வளர்க்கும் நாயினை எடுக்கும் இடம் தெருவாயிருத்தல்  நலமன்றோ? மேலைநாட்டு இனமென்று வானிபம் செய்யும் வணிகரிடம், வாங்கும் வழக்கம் வேண்டாமே! காரணம் யாதென கேட்போருக்கு, கூறுகிறேன் கேளுங்கள், குட்டியை ஈனும் தாயானது அடையும் துன்பம் அளவில்லாதது..... இடைவெளியின்றிப் பெறவேண்டும்  அந்தத் தாயும் குட்டிகளை, ஈனிய குட்டியைத் தரவேண்டும் பால் மறக்குமுன்னாலே, நம்மைப்போன்ற மனிதரிடம், வணிகர் பணம் சேர்த்திடவே! ஆப்பிரிக்கக் கிளி விலங்காக இருந்தாலும் சரி பறவையாய் இருந்தாலும் சரி செல்லப்பிராணி வளர்ப்பு என்ற பழக்கமே தவறு என்று சில வருடங்களாக  எனக்குத் தோ

மனம் மாறுதோ...

Image
  பட்டாம்பூச்சியின் உறக்கம் 👆 மனம் மாறுதோ... என்னென்னவோ எண்ணங்கள் ஏதேதோ சிந்தனைகள்.... அனைத்தும் சிந்தும் நிதமும் வெளியில் ஊடகத்தில் அடுக்குமொழியில்....... சிந்திய எண்ணம் எங்கு செல்லும்? வெளியே சென்று சிலரை விளிக்கும் என்னைப் பாரென்று கூவியழைக்கும்.... சட்டென மனம் மாறியது சிந்தும் பழக்கம் நின்றது! எண்ணம் சிந்தை இரண்டுமிங்கே நமக்கே பல முறை மாறும் பொழுது, பார் என் எண்ணம் இதுவே இன்றென பரந்து சொல்வதில் அர்த்தம் உளதோ?🤔 நிலையென்றெதுவும் இல்லையிங்கு, நிதமும் மாறும் பூமியில் வாழும் வாழ்வும் மாயமே... கண்ணில் காணும் கையில் கிடக்கும் இந்த நாளை,  இனிதே கழித்தால் என்ன குறை!? மகனின் மொழி முகநூலிலும் வலைப்பதிவிலும் மனதில் தோன்றும் எண்ணங்களை நான் பகிர்வது என் மகன்கள் இருவருக்கும் தெரியும். ஆனால் இருவரும் அவற்றைப் படிப்பதில்லை.... தமிழ் படித்தால் ஒருவனுக்கு கண் வலிக்கிறது என்றும் இன்னொருவனுக்கு முதுகு வலிக்கிறது என்றும் கூறுகிறார்கள். எங்களுடைய தவறுதான் இது, சிறு வயதிலேயே நிறைய தமிழ் படிக்க வைத்து, சரளமாக்கியிருக்க வேண்டும்.  அசட்டையாக விட்டுவிட்டோம், அது ஒருபுறமிருக்க இளையவன் கூறிய ஒரு கருத்து என் ம

கூடாரத்தில் காஃபி

Image
 கூடாரத்தில் காஃபி மருத்துவமனை  முன்னாலே அடர்ந்த சோலை பின்னாலே வீடிருக்கு நடுவாலே! நோயைநாடி  நோய்முதல் நாடி மெய்ஞானம் நாடும் மருத்துவ ஜோடி, இளங்கோ வடிவைத் தேடித்தேடி, பலரும் வருவர் நாடியிங்கே! இல்லம் பின்னே சோலை வனம், வனத்திலொரு கூடாரம்!  கூடாரம் கீழே மேசையிருக்க மேசைக்கடியிலே போண்டா! மேசை மேலே தட்டிருக்க தட்டுக்குள்ளே பஜ்ஜி சிரிக்க, சிரிப்புக்கருகில் சட்னி! உண்ணும் பஜ்ஜி எத்தனையென்று, எண்ணியவாறு தட்டிப்பறிக்கும் அக்கறையான ஆளில்லாமல்.... கோப்பைக் காப்பி கொதிக்கக் கொதிக்க சூடு பறக்க குடிக்க குடிக்க ஆகா இதுவே சொர்க்கம் என்று கள்ள மனமது எண்ணுது இன்று! நோயாளி என்றால் நோய் தனித்து  நண்பர் என்றால் விருந்தளித்து, தலைவலி என்றால் காப்பி கொடுத்து வேண்டாமென்றால் தேநீர் கொடுத்து, உடன் அமர்ந்து பேசி சிரித்து... பை நிறையப் பலகாரம், பிள்ளைக்கென்று பிரியத்துடன் கொடுத்தனுப்பும் வடிவம்மா! விருப்பத்துடன் புகைப்படம் எடுத்துத் தள்ளும் இளங்கோவர்! வெள்ளைக்கோவில் வட்டாரத்தில் இவரினும் உண்டோ இனியவர் இருவர்? இவரன்றோ மருத்துவர் 🤺 கொரோனா கால அடைப்பை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வரும் இந்த வேளையில், என்னுடை