சத்தம்
சத்தம் நாங்கள் முன்பு பெங்களூரில் குடியிருந்த பொழுது அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் இருந்தோம். அந்த நேரத்தில்தான் எங்கள் பாப்பாத்தி நாய்குட்டி எங்களிடம் வந்து சேர்ந்தாள். அவள் வந்தபிறகுதான் நாய்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆரம்பமானது. பொதுவாக அவளுக்கு நம்மிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், தன் பாஷையில் அவள் சொல்வது, நமக்கு 'வள் வள், லொள் லொள்' என்று காதில் விழும். சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாமல் கத்த மாட்டாள்.... நம்மிடம் ஏதாவது கூற விரும்பினால்தான் கத்துவாள். உதாரணத்திற்கு ஒரு பந்து வீசினால் ஓடி அதை பிடிப்பாள், பிறகு நாம் அந்த பந்தை மீண்டும் வீசாமல் இருந்தால் நம்மைப் பார்த்துக் கத்துவாள். அதாவது 'பந்தை வீசு' என்று அர்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணவு வேண்டுமென்பதற்கு ஒரு வகை சத்தம், 'மணி பத்தாயிற்று இன்னும் படுக்காமல் என்ன செய்கிறீர்கள்' என்றுநம்மை மிரட்டுவதற்கு ஒருவகை சத்தம்,நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நானும் உடன் வருகிறேன் என்று கெஞ்சுவதற்கு ஒரு வகை சத்தம் என்று பலவகை குரல்கள் இருந்தன பாப்...