இயல்பு மாறலாமா
இயல்பு மாறலாமா? இயற்கை கொடுத்த இயல்பினிலே, சிரித்துப் பேசும் தன்மையிலே பேசா மடந்தை அமைதியிலே, முந்தித் தள்ளும் வேகத்திலே பிந்தி நிற்கும் பொறுமையிலே, ஒருவருக்கொருவர் மாறிடும் குணங்கள் நிறைந்த பேரிடர்(😜) மனிதர் என்ற மானிடர்! கூடப்பிறந்த குணத்தை மாற்றுவதென்பது எங்கனம்? மாற்ற முயன்றால் வந்திடும் சுதந்திரம் இல்லா சூழலிலே, இயற்கை மாறிய பேச்சிலும் இயல்பில்லா நடத்தையிலும், சிறு இறுக்கம் பிறக்கும் மனதினிலே.... இறுகிய மனதில் இயைந்த இல்லம் இனிதாய் இருப்பது இயலாது! கையது ஒன்றே என்றாலும் விரல்கள் எல்லாம் வேறாகும் குட்டைவிரலை நீளமாக நீளும் விரலை குட்டையாக மாற்றுவதென்பது எங்கனம்? தாயும் சேயும் ஆனாலும் கணவன் மனைவி என்றாலும் தமையன் தம்பி தமக்கை தங்கை யாராயிருந்தபோதிலும், உடன் பிறந்த குணம், அதை மாற்றச் சொல்லா மனம், அதுவே வாழ்வில் சுகம்! குடும்பம் நான் பொதுவாக ஜாஸ்தி பேசும் இயல்பு உடையவள் அல்ல. சோசியல் டைப் என்று கூற முடியாது, பிரெண்ட்லி டைப் என்றும் கூறமுடியாது. கொஞ்சம் 'அன்சோசியல் மற்றும் அன் பிரெண்ட்லி' என்று சொல்லலாம். அடிக்கடி என் தாய் கூறுவார் இ...