உறவின் பரிமாணம்

தாயும் சேயும் கொண்ட உறவில் பலபரிமாணம் உண்டிங்கே- செல்லமாகக் கொஞ்சிக் கொண்டு சுற்றித்திரியும் தாயும் சேயும், அலட்டல் எதுவும் இல்லாமல் சரளமாக சுற்றும் உறவு, செல்லக்கோபம் சிறுசிறு சண்டை அவ்வப்பொழுது சிலிர்க்கும் உறவு, சின்னஞ்சிறிய ஓடை போல் சலசலத்து ஓடும் உறவும், ஆழமான ஆற்றை போல் அமைதியான நல்லுறவும்.. . தாய் சேய் உறவில் பல பரிமாணம் காணும் மனிதர்தம்மைப் போலே, அலட்டல் இல்லா அமைதியான தாய் சேய் உறவை கண்டோமிங்கே👇 உருவில் தானே வேற்றுமை கண்டோம், உறவின் தன்மையில் என்ன வேற்றுமை? கண்டோம் நமக்கும்- இந்தத் தாய் சேய் தமக்கும்?