Posts

Showing posts from July, 2021

விலங்குகளுக்கு நீதி தேவை

 நான் பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த வலைஒளி அலைவரிசையை நான்கு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். இது என் முதல் பதிவு இதனை ஆரம்பித்ததன் காரணமே, மனிதன் கையில் சிக்கிக் கொண்டு விலங்குகள் படும் அளவில்லாத துன்பம், நினைத்தே பார்க்க முடியாத துன்பம்.... இதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த அலைவரிசையை ஆரம்பித்தேன். நீங்கள் இதைக் கேட்டு, இதில் ஏதும் உண்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இதை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன் அதாவது 'ஷேர்' செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://youtu.be/62qDJcgcYJY

சிந்திக்க ஒரு நிமிடம்

Image
 🤔 சட்டம் மாறினால்......🙂 சில நாட்களுக்கு முன்பு ஒரு டாக்குமென்டரி படம் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஹிட்லர் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து தப்பித்தவர்களை பேட்டிக் கண்டிருந்த ஒரு டாக்குமெண்ட்ரி படம். அதில் வந்த சில காணொளிகளை பார்த்த பொழுது.... இப்பொழுது விலங்குகளை லாரிகளிலும் ட்ரக்குகளிலும் ஏற்றிச்சென்று கொல்லும் காட்சிக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.... பல நாட்கள் சோறு தண்ணி இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்த மனிதர்களை ரயில் வண்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் அடைத்து ஆஸ்ட்விச் என்ற ஊருக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள்.  போகும் முன்னே பலர் இறந்து விடுவார்கள். உயிரோடு தப்பித்தவர்களை அந்த ஊரில் இதற்காகவே கட்டிய சில கட்டிடங்களில் நச்சுக் காற்று மூலம் கொன்றுவிடுவார்கள்.  இன்று மேற்கத்திய நாடுகளில் ஆறு மாதங்களேயான பன்றி குட்டிகளை அப்படித்தான் கொன்று தின்கிறார்கள். அன்று நடந்தது முட்டாள்தனமான ஒரு நம்பிக்கையினால் வந்த பேரழிவு. இன்று இது பெரும் வியாபாரம், ஏகப்பட்ட பணம் புழங்கும் வியாபாரம். மற்றும் மனித சமுதாயத்திற்கு உணவளிக்கிறோம் என்ற ஒரு சப்பைக்கட்டு . ஏன் த

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

  வீகனிஸம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உடனே அனைவருக்கும் இது மேற்கத்திய கருத்து, வெளிநாட்டுக் கருத்துக்களை உபயோகப்படுத்த மாட்டோம், என்று திடீரென்று தாய்நாட்டின் பேரில் ஒரு பாசம் பொங்கி வழிகிறது. யோகா பற்றி பல புத்தகங்கள் இன்று வெளிநாட்டில் இருந்து வருகின்றன. நம் புத்தகங்களை விட மிகவும் அழகாக, நாம் புரிந்து கொண்டதை விட யோகாவைப் பற்றி அவர்கள் புரிந்துகொண்டு எழுதி இருக்கிறார்கள். அப்படி என்றால் யோகா வெளிநாட்டுக் கருத்தா? வெளிநாட்டில் உருவானதா? அகிம்சா வெளிநாட்டு கருத்தா?  புலால் உண்ண வேண்டாம் என்று கூறும் தமிழர்களின் உயிர் நாடி புத்தகம் - திருக்குறள், வெளிநாட்டிலிருந்து வந்ததா? அகிம்சையும் திருக்குறளும் போதிக்கும் உயிர் கொல்லாமையை தான் வீகனிஸமும் குறிக்கிறது... அது ஒரு பெயர், ஒரு வார்த்தை, அவ்வளவே...! உயிர் கொல்லாமையை போதிக்கும் சமண மதம் வெளிநாட்டிலிருந்து வந்ததா? அப்படிப் பார்த்தால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள் தான். அவைகளை நாம் கைவிட போகிறோமா....?  இன்று நம் நாட்டில் நம் கையால் தொட்டு புழங்கும் பல சாமான்கள் கார்,கைபேசி, பாத்திரம் கழுவும் இயந்திரம்