புகைபோக்கி

புகைப்போக்கி சமையற்கட்டில் வேலை செய்தால் சுற்றிச்சூழும் புகை நிறைய.. அடைத்துவைத்த கூரை வழியே எப்படிச் செல்லும் கரும்புகை வெளியே? அந்தக் கால வீட்டில் இருந்தது அருமையான புகை போக்கி! அடுப்பை எரித்தால் எரியும் புகையும் தாளிதம் செய்தால் கிளம்பும் புகைச்சலும் வெளியே செல்லத் தடம் தேவை! காற்றும் ஒளியும் வீட்டின் உள்ளே வந்துபோகத் தடம் தேவை! பாதை மட்டும் விட்டால் போதும், உள்ளும் வெளியும் செல்லும் வேலை ...