வேலியிலோடும் ஓணான்

வேலியில் ஓடும் ஓணான்தன்னை வேட்டியில் மடித்துக் கட்டிக்கொண்டு ஐயோ! குடையுது என்றாராம் வேண்டப்பட்ட மனிதர் ஒருவர்.... காட்டில் மரத்தில் செடியில் கொடியில் பச்சைப் பசும்புல் வெளியிலே சுற்றித் திரியும் விலங்கையெல்லாம் ஓரடிக் கூண்டில் அடைத்து வைத்து வெட்டி அறுத்து உண்ணும் பழக்கம்... இதனால் வந்தது h5 n8 h5n1 h5n6 h7n9...... என்னும் வைரஸ்... போதும் பறவை வேண்டாம் நமக்கு, தாவர உணவே நமக்கமுதம் என்ற எண்ணம் மட்டும் வரவில்லை, அடைத்த பறவை கொன்றெறிந்து புதிய பறவை வளர்த்திடலாம் என்று எண்ணும் மாமனிதர்! என்னென்பேன் மனிதர் நம்மை! நம்மிடம் சிக்கி சாவதா, வைரஸ் கிருமிக்கிரையாவதா? பாவம் அந்தக் கோழியும் வாத்தும், என்ன பாவம் செய்ததுவோ? மனிதப் பேயிடம் மாட்டிக்கொள்ள! 😥😥😥😥😥😥😥 உயிரோடு அந்தப் பறவைகளை முட்டையில் கட்டி எரிக்கும் காட்சி 👇 மனிதர் என்று கூறிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது... 😥 படங்கள் நன்றி: Indian Express 👇